பிறரை மகிழ்விக்க உயர்ந்த மன நிலை தேவை. அவ்வாறு வாழ்வோமாயின் வாழ்வில் எமக்கு எவ்வித குறையுமிருக்காது என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்
.கண்டி கெட்டம்பே மைதானத்தில் இடம் பெற்ற கண்டி சாரணர் இயக்க தலைமையகம் ஒழுங்கு செய்த நான்காவது வருட கெம்போறி (கண்டி-ஜம்போரி) நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
மேற்படி கூற்றை சாரணர் இயக்கத்தின் தந்தை எனக் கூறப்படும் அதன் ஸ்தாபகர் பேர்ட்டன் பவல் கூறியிருந்தார். இது சாரணர் இயக்கத்திற்கு மட்டுமல்லாது முழு மனித சமுகத்திற்கும் பொருந்துவாக உள்ளது.
நாம் எமது கதையைக் குறைத்து செயற்பாட்டை அதிகரிக்க வேண்டும். எமது செயற்பாடுகளை அகமகிழ்வுடன் மேற்கொள்ள வேண்டும். அதற்கு சாரணர் இயக்கம போன்றவை உதவுவதாகக் கூறினார்.
வாழ்வில் முக்கிய விடயம் மகிழ்ச்சியாக இருப்பது. தாம் மகிழ்ச்சியாக இருக்க பிறரையும் மகிழ்விக்கவேண்டும். பிறரை மகிழ்விக்க உயர்ந்த மன நிலை தேவை. அவ்வாறு வாழ்வோமாயின் வாழ்வில் எமக்கு எவ்வித குறையுமிருக்காது என்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் உற்பட வட, கிழக்கு பாடசாலைகளைச் சேர்ந்த சாரண மாணவ மாணவிகளும் இதில் கலந்துக் கொண்டனர். பிரதமர் கண்டி சாரணர் இயக்கத்தின் இணைய மொன்றையும் ஆரம்பித்து வைத்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’