வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 அக்டோபர், 2010

மீள்குடியேறிய மக்களின் அவலங்களை அரசியல் வியாபாரமாக்கும் முயற்சிகள் இன்று தோற்கடிக்கப்படுகின்றது - சந்திரகுமார் பா.உ

மீள்குடியேறிய மக்களின் அவலங்களை அரசியல் வியாபாரமாக்கும் முயற்சிகள் இன்று தோற்கடிக்கப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் வீடியோ இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (30) கிளிநொச்சி கமநல அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தில் கிளிநொச்சி கமக்கார அமைப்புகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க நிதி உதவியுடன் வழங்கப்பட்ட இரு சக்கர உழவு இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் மீள்குடியேற்றத்தின் போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப் பெரிய கேள்விக்குறியாக எம்முன்னே இருந்தது. ஆனால் சிறுபோகத்தில் அவர்களுக்கான இலவச விதைநெல் மானிய அடைப்படையில் உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் என்பன அரச மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நிலையினை மிகக் குறுகிய காலத்தில் அடைந்துள்ளோம்.
அறுவடை செய்யப்படும் விவசாய உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு அடையும் ஆனால் இவ்விவசாயிகளில் பலர் தமது உற்பத்தி நெல்லை தற்காலிக கொட்டகைகளில் பாதுகாக்க முடியாமை தொடர்பில் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் என்னை அணுகினர் இதுதொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாகவும் அதற்கு அவர் விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் யுத்தத்தின் போது மக்களுக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தது. அதேபோன்று மீள்குடியேற்றத்திலும் பொருளாதார அபிவிருத்திக்காக அவர்கள் வடமாகாணத்திற்கு என வழங்க முன்வந்த 500 இரு சக்கர உழவு இயந்திரங்களில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 180 இரு சக்கர உழவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனில் அவர்கள் காட்டும் அக்கறைக்காக என்னுடைய நன்றிகளை அவர்களுக்குத் தெரிவிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் தயாரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண பிரதி பிரதம செயலாளர் இராசநாயகம் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் பத்மநாதன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கழகப் பிரதிநிதி ஸ்செபனி தினியோன் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’