வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 அக்டோபர், 2010

சர்வதிகார ஆட்சிக்கு எதிராக இன்று முதல் ஆர்ப்பாட்டங்களும்,எதிர்ப்புகளும் தொடரும்: ஜே.வி.பி.

ர்வதிகார ஆட்சிக்கு எதிராக இன்று முதல் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புகளும் தொடரும் என ஜே.வி.பி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி. யின் தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சோமவன்ச இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சோமவன்ச,

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையானது நாட்டில் சர்வதிகார ஆட்சியை புலப்படுத்துகின்றது. எனவே இந்த சர்வதிகார ஆட்சிக்கு எதிராக ஜே.வி.பி யானது நாளை முதல் ஆர்பாட்டங்களை மேற்கொள்ள உள்ளதோடு தமது எதிர்ப்புக்களையும் தெரிவிக்கும்.
யுத்தத்தை வெற்றி கொண்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அரசாங்கம் பழிவாங்கியுள்ளது. இச் செயலானது நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ஆகும். ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதை அனைத்து பொது மக்களும் கண்டிக்க தக்கது.
இதேவேளை ஜே.வி.பி முன்னெடுக்கும் ஜனநாயகம் ரீதியிலான நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு இந்த அரசாங்கத்திற்கு சரியான பாடம் ஒன்றையும் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’