வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 அக்டோபர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு எம் கஷ்டங்களைக் கேட்டறியுமா? : தமிழ் அரசியல் கைதிகள்

ங்கள் துன்பங்களையும் கஷ்டங்களையும் கேட்டறிந்து கொள்ள, நல்லிணக்க ஆணைக்குழுவினராகிய நீங்களாவது எங்கள் முன் வரவேண்டும்.

விடுதலை செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எங்களை விடுதலை செய்வதற்காக எங்கள் அனைவரினதும் கருத்துக்களையும் கேட்டறிந்து ஜனாதிபதி முன்னிலையில் சமர்ப்பியுங்கள் என புதிய மகசின் சிறைச்சாலை, ஜி.எச்.ஜே. பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி உருவாக்கிய நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்க் கைதிகள் எழுதிய இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

" நல்லிணக்க ஆணைக்குழு எங்களது கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்.
1993 ஆம் ஆண்டிலிருந்து கைது செய்யப்பட்டு இதுவரை காலமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளான நாங்கள் சொல்லொணா துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறோம்.

நாம் இந்நாட்டுப் பிரஜைகள் இல்லையா?

இளமையிலிருந்து சிறைச்சாலையிலேயே காலத்தைக் கழித்துவரும் நாங்கள், வாழ வேண்டும் என்பதற்காக இங்கு உயிரோடு இருக்கிறோம். ஐந்து வருடங்கள் தொடக்கம் 17 வருடங்களாக சிறையினுள்ளே வாழ்கின்ற நாங்கள் இந்நாட்டின் பிரஜைகள் இல்லையா? அல்லது உறவுகளுடன் சேர்ந்து வாழத் தகுதியற்றவர்களா? விடை காணா வினாக்களாகவே உள்ளன.
எமது நாட்டின் எல்லா பாகங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுக்க நடவடிக்கை எடுக்கிறீர்கள்.
எல்லா வகையிலும் பாதிக்கப்பட்ட நாங்கள் எங்கள் குறைகளை யாரிடம் சொல்ல முடியும்? எங்கள் துன்பங்களையும் கஷ்டங்களையும் கேட்டறிந்து கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவினரான நீங்களாவது எங்கள் முன் வரவேண்டும்.
விடுதலை செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எங்களை விடுதலை செய்வதற்காக, எங்கள் அனைவரினதும் கருத்துக்களையும் கேட்டறிந்து ஜனாதிபதி முன்னிலையில் சமர்ப்பியுங்கள். விடுதலை செய்யப்படுவோம் என பலரையும் நம்பி ஏமாந்துவிட்ட நிலையில் உங்களை நாடி வந்துள்ளோம்.

குடும்ப நிலைமை

எங்கள் குடும்ப உறவினர்களின் கஷ்ட நிலைமைகளை விபரித்துக் கூற வார்த்தைகள் இல்லை. இருப்பினும் நாங்கள் விடுதலை செய்யப்பட்டு தங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடனே இத்தனை வருடங்களாக அவர்கள் காலத்தைக் கழித்து வருகிறார்கள். அவர்களில் சிலர் இறந்தும் விட்டனர்.
நாடு எவ்வளவோ அபிவிருத்தியடைந்துவிட்ட பின்னரும், தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மட்டும் மாறவே இல்லை.
எங்களை விடுதலை செய்வதற்காக எங்களது கருத்துக்களையும் கேட்டறிய எங்கள் முன்னிலையில் சமூகமளியுங்கள். நீங்கள் அனைவரும் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்களையும் சந்திக்க வர வேண்டும் எனக் கோரி நிற்கிறோம்.
வருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்."

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’