வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ் அரசியல் கைதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் அரசியல் கைதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 அக்டோபர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு எம் கஷ்டங்களைக் கேட்டறியுமா? : தமிழ் அரசியல் கைதிகள்

ங்கள் துன்பங்களையும் கஷ்டங்களையும் கேட்டறிந்து கொள்ள, நல்லிணக்க ஆணைக்குழுவினராகிய நீங்களாவது எங்கள் முன் வரவேண்டும்.

வியாழன், 7 அக்டோபர், 2010

சட்டவிரோதமாக ஏராளமான கைதிகளைத் தடுத்து வைத்துள்ள நாடாக இலங்கை

லகில் ஏராளமான கைதிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை திகழ்வதாக ஜனநாயகத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்

கஸின் சிறைச்சாலையில் 5 தொடக்கம் 17 வருடங்களாகச் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாங்கள் எங்கள் விடுதலை தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்தும் இதுவரையில் அதுபற்றிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

வியாழன், 8 ஜூலை, 2010

'வெளி உலகைக் காட்டுங்கள்' - தமிழ் அரசியல் கைதிகள் -உருக்கமான கோரிக்கை

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விரைவில் விடுதலை செய்யுமாறு சமூக அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் “வெளி உலகைக் காட்டுங்கள்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.தமது விடுதலை தொடர்பாக மெகசின் தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 24 ஜூன், 2010

சந்தேகத்தின் பேரில் கைதான எங்களை விடுவியுங்கள் : தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை _

பல வருடங்களுக்கு மேலாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் பாதுகாப்பு செயலாளருக்குக் கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திங்கள், 11 ஜனவரி, 2010

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின்எண்ணிக்கை 602 ஆக அதிகரிப்பு-21 பேர் கவலைக்கிடம் எனத் தெரிவிப்பு!


விடுதலைகோரி நேற்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதை அடுத்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நாடெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் 602ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, வெலிக்கடை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 602 பேரே இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது பிணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாம், எமக்கு விடுதலை அல்லது பிணை அனுமதி வேண்டி பல உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அவை எவற்றையும் உரிய அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. உடலை, உயிரை வருத்தி விடுதலைக்காக நாங்கள் மேற்கொள்கின்ற இந்நடவடிக்கையின் நிமித்தமாக நிச்சயம் எங்கள் எல்லோருக்கும் விரைவில் விடுதலை கிடைக்கப்பெற அரசுடன் தமிழ் அமைச்சர்களாக உள்ள வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான், விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் போன்றவர்களும், தமிழ் பேசும் பாராளுமன்ற உறுபினர்களும் எங்களுக்கு துணைநின்று ஜனாதிபதியிடம் எமது விடுதலையை வலியுறுத்தி பேசி, எமக்கான விடுதலையை பெற்றுத்தரும்படி அனைவரையும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம். எனவே, கடந்த 5ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து தொடருகின்றோம். இந்த நிலையில் கௌரவ நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட நேரடியாக சிறைச்சாலைக்கு விஜயம் செய்து எமக்கு விடுதலை தொடர்பான வாக்குறுதிகளை வழங்கும் வரை எமக்கு இறப்பு நேர்ந்தாலும் இந்தப் போராட்டத்தைத் தொடருவோம்.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

நான்காவது நாளாகத் தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தமது உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு மகசின் சிறைச்சாலை, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைசாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களிலும் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தப் போதும், அவை தோல்வியை கண்டுள்ளன.

எனினும் இம்முறை எவ்வாறாயினும் விடுதலை பெற வேண்டும் என்ற அடிப்படையில் தீவிரமான வகையில் தாம், சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 9 பேரின் நிலைமை மிகவும் மோசமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.