வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 அக்டோபர், 2010

நவீன காலத்திற்கேற்ப எமது சிறார்களின் கல்விச் செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் - சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் பா.உ

வீன காலத்திற்கேற்ப எமது சிறார்களின் கல்விச் செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
சங்கானையில் இன்று (17) திறந்து வைக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி சர்வதேச பாடசாலை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் காலச் சுழற்சியில் நவீன காலத்திற்கேற்ப எமது சிறுவர்களின் கல்விச் செயற்பாடுகள் யாவும் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதுடன் சிறுவர்களது வளமான எதிர்காலத்திற்கு வழியமைக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தங்களால் எமது மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் மட்டுமல்ல கல்விச் சொத்தையும் இழந்துவிட்டோம்.

இழந்து போன கல்வியை ஈடுசெய்ய வேண்டிய கடப்பாடு இதுபோன்ற தனியார் பாடசாலைகளுக்கும் உண்டு என்பதுடன் தமிழ் மொழியை மட்டுமல்ல ஆங்கிலம் சிங்களம் போன்ற பிறமொழிகளையும் கற்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

எனவே எமது எதிர்காலச் சிறார்களின் வளமான சிறப்பான வாழ்வுக்காக நாமெல்லோரும் இணைந்து பணியாற்றுவதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.

அத்துடன் இந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் கோரிக்கைகள் யாவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையின் கீழ் முன்னெடுக்கவும் நாம் தயாராகவுள்ளோம் என்றும் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கான பிரதான கல்விக் கூடத்தை பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்தார். சிறுவர்களுக்கான கல்;விக் கூடத்தை சங்கானை பிரதேச செயலாளர் திருமதி பாபு திறந்து வைத்தார்.

அடுத்து அரங்க நிகழ்வுகள் அளவெட்டி அருணாசலம் வித்தியாலய அதிபர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றன.

அங்கு ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் உரையாற்றும் போது பல்வேறு துறைகளில் புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் அறிவாளிகளையும் உருவாக்கித் தந்த யாழ்ப்பாண மண்ணின் கல்வி தற்போது வீழ்ச்சி கண்டிருப்பதானது வேதனைக்குரியது. இதற்குக் காரணம் கடந்த 30 ஆண்டுகாலமாக எமது மண்ணில் இடம்பெற்ற போர்ச்சூழல் முக்கிய காரணமாக இருந்துள்ளது.

ஆனால் இப்போது ஒரு சுமூகமானதொரு சூழல் தோன்றியுள்ள நிலையில் எமது எதிர்கால சந்ததியினரான சிறார்களின் கல்வி வளர்ச்சி என்பது முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சியை மேற்கொண்ட இதன் நிர்வாகி முகுந்தன் பாராட்டுக்குரியவர்.

எனவே கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து புதியதொரு யுகத்தில் புதிய சமுதாயத்தை உருவாக்க எல்லோரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்றும் இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு எமது கட்சி என்றும் பக்கபலமாக இருக்கும் என்றும் கமலேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரை இணைப்பாளர் தனபாலன் ஈ.பி.டி.பி. வட்டுக்கோட்டை பிரதேச பொறுப்பாளர் மகேந்திரன் (வள்ளுவன்) இலங்கை வங்கி முகாமையாளர் பகீரதன் சங்கானை ஹட்டன் நஷனல் வங்கி முகாமையாளர் தயாகரன் சங்கானை தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் வரதராஜா உட்பட பல்வேறு துறைசார்ந்தோரும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’