பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய அருங்கலைகள் சபை மற்றும் தேசிய வடிவமைப்புச் சபை என்பவற்றின் ஒருங்கிணைந்த பணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய (14)தினம் ஆராய்ந்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு அமைச்சு அலுவலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற இந்நிகழ்வின் போது தற்போதைய சந்தைக்கேற்ற வடிவமைப்புக்களை எவ்வாறு முன்னெடுப்பது என்றும் அந்த வடிவமைப்பினைக் கொண்ட பாரம்பரிய கைப்பணிப் பொருட்களை பொதுமக்களிடம் கொண்டு செல்வது எவ்வாறு என்றும் அமைச்சர் அவர்களது ஆலோசனைக்கேற்ப விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்படி இரு நிறுவனங்களினதும் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் அவர்களால் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மேலதிகச் செயலாளர் தேசிய அருங்கலைகள் சபையின் தலைவர் உட்பட்ட அதிகாரிகள் தேசிய வடிவமைப்புச் சபையின் தலைவர் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’