பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைத்தலை ஊக்குவிக்கும் விதத்தில் சிகரட் வடிவத்தில் பொதிசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உள்ளடக்கிய 14000 சிகரெட்டுகளையும் சந்தேக நபர் ஒருவரையும் அலவத்துகொடை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
அக்குறணை நகரில் வியாபார ஸ்தலம் ஒன்றில் இருந்நு கைப்பற்றப்பட்ட சிகரட் வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருந்த இத்தயாரிப்பு ஒன்றுக்குள் 25 வில்லைகள் அடங்கியுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
பாடசாலைகளுக்கு அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இத்தயாரிப்புக்குள் கானப்படும் வில்லைகள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை கொண்டதாகும். அவ்வில்லைகளை பாடசாலை மாணவர்கள் பாவிப்பதன் மூலம் மாணவர்கள் சிகரட் பாவனைக்கு பழக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பொலீஸார் கூறுகின்றனர். கன்டெடுக்கப்பட்ட வில்லைகளில் ஏதேனும் போதைப்பொறுற்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு அரசாங்க இரசாயண பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கண்டி மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்க முன் மாலை ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்க மறியளில் வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய அலவத்துiகாடை பொலிஸ நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி உற்பட பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’