வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 2 அக்டோபர், 2010

வதிரி தோற் தொழிற்சாலை ஊழியர்களுக்கான ஊதியம் அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது!

திரி தோற் தொழிற்சாலை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கி வருகின்ற வதிரி தோற் தொழிற்சாலை ஊழியர்களுக்கான ஊதியப் பணத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார். (படம் இணைக்கப்பட்டுள்ளது)
மேற்படி தொழிற்சாலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களது வசதி கருதி இவர்களுக்கான ஊதியத்தை அமைச்சர் அவர்கள் மகேஸ்வரி நிதியத்தினூடாக வழங்கினார்.
இதன் பிரகாரம் ஏற்கனவே 1 இலட்சம் வழங்கப்பட்டிருந்த நிலையில் புதிதாகத் தொழில் பயிலவென இணைந்து கொண்டவர்களின் ஊதியத்திற்கென இன்றைய தினம் ஐம்பதினாயிரம் ரூபா அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’