தெஹிவளை முதல் கொள்ளுப்பிட்டி வரை உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டபூர்வ தன்மை மற்றும் குறித்த வருடத்தில் முகவர் நிலையமாக செயற்படுவதற்கான அனுமதிப் பத்திரம் பெறப்பட்டுள்ளதா என்பன குறித்து சோதனையிடப்படும் என மோசடிப் புலனாய்வுப் பணியகம் இணையத்தளத்திற்குத் தெரிவித்தது.
இதன் முதற் கட்டமாக, தெஹிவளை முதல் கொள்ளுப்பிட்டி வரையிலுள்ள முகவர் நிலையங்கள் சோதனையிடப்பட்டு விபரங்கள் தொகுக்கப்படவுள்ளன. கொழும்பில் செயற்படும் சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை முறியடிப்பதற்காகவும் சட்டபூர்வமாக இத்தொழிலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை மோசடி செய்த மோசடியான நிறுவனங்கள் குறித்து புகார்கள் கிடைத்துள்ளன. இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என மோசடிப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’