வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 2 அக்டோபர், 2010

மேல் மாகாண அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி தலைமையில் மாநாடு

டுத்த மூன்று வருடங்களுக்கு மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் உயர் மட்ட மாநாடொன்று ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இணையத்தளத்திற்கு தெரிவித்தார்
.இக்கூட்டத்தில் மேல் மாகாண ஆளுநர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள்,மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2011, 2012, 2013 ஆகிய வருடங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள், ஏற்கனவே மேல் மாகாணத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது அரச அதிகரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மாகாண சபைகளினால் மேற்கொள்ளாப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஆராயும் உயர் மட்ட கூட்டங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே மேல் மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஆராயும் உயர் மட்ட மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 4ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’