வெடிபொருட்களை வைத்திருந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு கிலோ கிராமிற்கு அதிகமான சக்திவாய்ந்த வெடிபொருட்களை குறித்த இருவரும் வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
80 மீல்லி மீற்றர் மோட்டார் செல் ஒன்றில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
என்ன காரணத்திற்காக இவர்கள் குறித்த வெடிபொருட்களை வைத்திருந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’