வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

மலேசியாவில் “தமிழ் அகதிகள் மாநாடு' _

லேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் சுதந்திரவாழ்வை உறுதிப்படுத்தும் முதலாவது மாநாடு இன்று மலேசியாவில் இடம்பெறவுள்ளது.மலேசியா கோலாலம்பூரில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

30 வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வாருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் அவர்கள் வாழ்வதற்காக எவ்வித வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை குறிப்பாக முறையான வேலைவாய்ப்பு அனுமதி,தங்குமிடம்,உணவு,கல்வி வசதிகள் செய்துக்கொடுக்கப்படவில்லை என மலேசிய மாற்றுசெயலணி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அரசாங்கத்தின் மனிதபிமான அடிப்படையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு காணப்பட்ட 72 இலங்கை அகதிகளை மீட்டெடுத்து அவர்களைமூன்றாம் தரப்பு நாடுகளில் குடியமர்த்த செயற்பட்டிருக்கும் மலேசிய மாற்றுசெயலணி தலைவர் கலைவாணர் முழு பொறுப்பையும் ஏற்று நடத்துகிறார்.
மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் வாழ்வு உறுதிப்படுத்த முடியும் என்பதற்காகவே இம்மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’