வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 அக்டோபர், 2010

306 போராளிகள் இன்று விடுதலை! - ஏனையோரையும் விடுதலை செய்யும் படி டியூவிடம் கோரிக்கை!!

மிழீழ விடுதலைப் புலிகளின் 306 போராளிகள் இன்று வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் தகா வித்தியாலயக் கட்டிடத்திலுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் 200 பெண் போராளிகளும், 108 ஆண் போராளிகளும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந் நிகழ்வில் சிறிலங்காவின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அத்துடன், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் என் திஸநாயக்கா மற்றும் படை அதிகாரிகளும் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் குறித்த விபரங்கள் இணையத் தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
http://www.bcgrsrilanka.com என்ற இந்த இணையத்தளத்தை சிறிலங்காவின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்தார்.
யாழ். அரச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டியூ குணச்சேகர, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள், புனர்வாழ்வு பெறுவோர் மற்றும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விபரங்களை மேற்குறிப்பிட்ட இணையத் தளத்தில பார்வையிட முடியும் என்று தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கத்தால் வன்னியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த அழுத்தங்களை அடுத்தே, தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விபரங்களை வெளியிட சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
ஆனால், இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் போராளிகளைப் பார்வையிடுவதற்கு மனிதவுரிமை அமைப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் இதுவரை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் வன்னிப் போரின் போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று யாழ் செயலகத்தில் அமைச்சர் டியூ குணசேகரவை வழிமறித்து கண்ணீர்விட்டு கதறி அழுது தமது முறைப்பாட்டு மனுக்களைக் கையளித்துள்ளனர்.
தமது அன்புக்குரியவர்களை விடுதலை செய்ய உதவுமாறும், காணாமல் போனவர்களின் நிலை குறித்தும் அமைச்சரிடம் மன்றாடிக் கேட்ட நிகழ்வு நெஞ்சை உருக்குவதாக இருந்ததாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’