யாழ் குடாநாட்டிற்குள் தற்போது பொதுமக்களது பாவனைக்காக விடப்பட்டிருக்கும் பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று காலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இக்கலந்துரையாடலின் போது மிதிவெடிகளை அகற்றுவதில் நிலவுகின்ற தடைகள் பிரச்சினைகள் குறித்தும் ஏனைய பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் பிரகாரம் யாழ் வசந்தபுரம் கடற்கரை வீதி துண்டி போன்ற பகுதிகளில் மிதி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை உடன் ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கலந்துரையாடலில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பிரதேச செயலாளர் மிதிவெடிகளை அகற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’