வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 அக்டோபர், 2010

ஐ.நா. தனது பெறுமானங்களை மீள்மதிப்பீடு செய்யவேண்டும் :அமைச்சர் பீரிஸ்

க்கிய நாடுகள் சபை தற்போதைய சர்வதேச சூழலுக்கு ஏற்ப தனது பெறுமானங்களை மீள்மதிப்பீடு செய்ய வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார். 65 ஆவது ஐ.நா. தின நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் பிரச்சினைகளின் தன்மையானது எவ்வாறு மாற்றமடைந்துள்ளது, அவை பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பன குறித்து அமைச்சர் பீரிஸ் விளக்கினார்.
மனித உரிமைகளில் பொருளாதாரப் பரிமாணத்தின் அவசியத்தை வலியுறுத்திய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், உலகிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் வாழ்வதற்கான உரிமை மாத்திரமல்லாமல் கல்வி, சுகாதாரம், சுற்றாடல், பொருளாதாரம் என்பனவற்றை சிறந்த முறையில் அடையக்கூடிய சிறந்த வாழ்க்கைக்கான உரிமை இருக்க வேண்டும் என்றார்.
இலங்கை கடந்த 15 வருடங்களில் வறுமையை 11 சதவீதத்தால் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவற்றின் அடிப்படையில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மானியங்களுக்கான நிறுத்தப்படாதிருப்பதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், மூன்றாம் உலக நாடுகளின் பொருட்களுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளின் சந்தைகள் திறந்திருக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’