வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 அக்டோபர், 2010

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தில்

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் குறைந்த நாடுகள் தொடர்பான புதிய பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஜேர்மனியின் பேர்லினைத் தளமாகக் கொண்ட ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு, ஊழல் தொடர்பான, இவ்வருடத்திற்கான வருடாந்த அறிக்கையை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
ஊழல் தொடர்பான ஞானத்தின் அளவின்படி நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, 178 நாடுகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. அதிக புள்ளிகளைப் பெற்ற நாடுகள் குறைந்தளவு ஊழலைக் கொண்டுள்ளன.
ஊழல் குறைந்த நாடுகளின் வரிசையில் 178 நாடுகள் கொண்ட இவ்வருட பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கைக்கு 3.2 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் இலங்கை 3.1 புள்ளிகளைப் பெற்று 180 நாடுகளின் பட்டியலில் 97 ஆவது இடத்தில் இருந்தது. இவ்வருடம்; இலங்கைக்கான புள்ளி 0.1 இனால் அதிகரித்துள்ளது.
எனினும், இது குறிப்பிடத்தக்க மாற்றம் அல்ல என ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனலின் இலங்கைக் கிளைத் தலைவர் ஜே.சி. வெலியமுன கூறியுள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தில் பூட்டான் மாத்திரமே இப்பட்டியலில் 4 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பட்டியலில் டென்மார்க், நியூஸிலாந்து, சிங்கப்பூர் ஆகியன 9.3 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை வகிக்கின்றன. அதாவது இந்நாடுகளே உலகில் மிகவும் ஊழல் குறைந்த நாடுகளாகும்.
இப்பட்டியலின் கடைசி இடத்தில் சோமாலியா உள்ளது. அதனுடன் பர்மா, ஆப்கானிஸ்தான், ஈரான், ஆகியன மிக அதிக ஊழல்மிகுந்த நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
தெற்காசிய நாடுகளில் பூட்டான் 5.7 புள்ளிகளைப் பெற்ற முன்னிலையில் உள்ளது. உலகரீதியில் பூட்டான் 36 ஆவது இடத்தில் உள்ளது..
இந்தியா 3.3புள்ளிகளைப் பெற்று 87 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், மாலைதீவு ஆகியன 143 ஆவது இடத்தில் உள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’