உலகம் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மாறும் உலக மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் எமக்கு அறிவு தேவை. அந்த அறிவை சகல மாணவார்களும் தேடிக் கற்றுக் கொள்ள வேண்டும்.
எமது கலாசாரத்தைப் பாதுகாத்துக் கொண்டால் அதுவே எமக்குப் பாரிய வெற்றியாக இருக்கும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் விஜயசிறி ஹேரத் தெரிவித்தார்.
இன்று மடவளை மதீனா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்தப் பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"பிரித்தானியா, ஐரோப்பா, போர்த்துக்கல், ஸ்பானியா போன்ற இன்று பெருமை அடிக்கும் நாடுகள் சுமார் 1500 வருடங்களுக்கு முன் இருளில் மூழ்கி இருந்தன. மாதத்தில் ஒரு முறையாவது அவர்கள் குளிக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தினமும் நீராடும் நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் முஸ்லிம்களே.
அந்த முஸ்லிம்களை சித்திரவதை செய்ய அவர்கள் மேற்கொண்ட திட்டம்தான் கலாசார சீரழிவாக அமைந்தது.
எனவே ஒரு சமுதாயம் நிலைத்து நிற்க வேண்டுமானால், அதன் கலாசாரமும் நிலைத்து நிற்க வேண்டும்.
எனவே கீழைத்தேச நாட்டவர்களான நாம் எமது கலாசாரத்தைப் பறிகொடுத்திவிடக் கூடாது.
இந்திய சாம்ராஜ்யத்தை 600 வருடங்கள் மொகலாயர் ஆண்டனர். அதாவது முஸ்லிம்கள் ஆண்டனர். ஆனால் பல்வேறு சமூக அமைப்புக்கள், பல்வேறு மதத்தினர், பல்வேறு இனத்தினர், பல்வேறு மொழியினர் என்று வேறுபட்டிருந்தாலும் அவர்கள் ஒற்றுமையாக அந்த ஆட்சியை ஏற்றுக்கொண்டனர். இது கீழைத்தேய கலாசாரத்தின் ஒரு பண்பாகும். அதாவது நல்லாட்சி என்றால் எவர் ஆண்டாலும் அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். எனவே எமது கலாசாரத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாணவர்களாகிய உங்களை வேண்டுகிறேன்" என்றார்.
இவ்வைபவத்தில் ஆசிரிய மாணவர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர். வத்துகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் சந்திரிக்கா மாயாதுன்ன, மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவு பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம். றிபாய் உட்பட அதிதிகள் பரிசில்களை வழங்கினர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’