ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடப்பது தொடர் கதையாகி விட்டது. இந்நிலையில் 12 வயது இந்திய மாணவரை பள்ளியில் வைத்து தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெயர் சொல்ல விரும்பாத அந்த சிறுவன் மெல்போர்னில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 18-ம் தேதி வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற அவரை அடையாளம் தெரியாத 2 மாணவர்கள் தாக்கியுள்ளனர். அவரை பின்தொடர்ந்த வந்த அந்த 2 பேர் திடீரென்று அவரைப் பிடித்து கீழே தள்ளி முகத்தில் தாக்கியுள்ளனர்.
இதில் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அதில் அவர் கண்ணில் துத்தநாகத் தகடு பொருத்தவிருக்கின்றனர். இதனால் அவர் கண் பார்வை நிரந்தரமாக பாதிக்கப்படுமோ என்று அம்மாணவரின் தந்தை அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு நிறவெறி காரணமாக இருக்கும் என்று தான் சந்தேகப்படுவதாகக் கூறினார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’