வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 அக்டோபர், 2010

ஆஸ்திரேலியாவில் அட்டகாசம்: 12 வயது இந்திய சிறுவன் மீது தாக்குதல்

ஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடப்பது தொடர் கதையாகி விட்டது. இந்நிலையில் 12 வயது இந்திய மாணவரை பள்ளியில் வைத்து தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதன், 24 மார்ச், 2010

காதலனை கொன்று மாமிச விருந்துக்கு திட்டமிட்ட ஆஸி பெண்

மெல்போர்ன்: காதலனை அடித்துக் கொலை செய்த ஆஸ்திரேலிய பெண் , பிணத்தை சாப்பிட திட்டமிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அப்பெண் பிணத்தை தான் சாப்பிட விரும்பியதோடு மட்டுமல்லாமல் தன் நண்பனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி 'விருத்துக்கு வருகிறாயா' என்றும் அழைத்துள்ளார்.

செவ்வாய், 2 மார்ச், 2010

ஆஸி: இந்திய-இலங்கை தம்பதி மீது தாக்குதல்


மெல்போர்ன்: ஆஸ்திரேலியா வில் ஒரு இந்திய-இலங்கைத் தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களது வீடும் சூறையாடப்பட்டுள்ளது.

மெல்போர்னில் காரம்ஸ் டவுன் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் அகல்யா என்ற இந்தியப் பெண்ணையும் இலங்கையைச் சேர்ந்த அவரது கணவர் ரஞ்சித் சகஸ்ரநாமத்தையும் 25 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவை விட்டு உடனே வெளியேறுமாறு எச்சரித்தபடி இந்தத் தாக்குதலை அந்தக் கும்பல் நடத்தியுள்ளது.

குடிபோதையில் இருந்த அந்தக் கும்பல் சுமார் இரண்டரை மணி நேரம் அந்த வீட்டை சூறையாடியபடி தம்பதியைத் தாக்கியது.

போலீசாரை தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும் கூட அவர்கள் உடனடியாக உதவிக்கு வரவில்லை என்று ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

19 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட்ட இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உடனே நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கொல்வோம் என்று அந்தக் கும்பல் கூறியதாகவும சகஸ்ரநாமம் கூறியுள்ளார்.

ஆஸதிரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.