-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
செவ்வாய், 2 மார்ச், 2010
ஆஸி: இந்திய-இலங்கை தம்பதி மீது தாக்குதல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா வில் ஒரு இந்திய-இலங்கைத் தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களது வீடும் சூறையாடப்பட்டுள்ளது.
மெல்போர்னில் காரம்ஸ் டவுன் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் அகல்யா என்ற இந்தியப் பெண்ணையும் இலங்கையைச் சேர்ந்த அவரது கணவர் ரஞ்சித் சகஸ்ரநாமத்தையும் 25 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவை விட்டு உடனே வெளியேறுமாறு எச்சரித்தபடி இந்தத் தாக்குதலை அந்தக் கும்பல் நடத்தியுள்ளது.
குடிபோதையில் இருந்த அந்தக் கும்பல் சுமார் இரண்டரை மணி நேரம் அந்த வீட்டை சூறையாடியபடி தம்பதியைத் தாக்கியது.
போலீசாரை தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும் கூட அவர்கள் உடனடியாக உதவிக்கு வரவில்லை என்று ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
19 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட்ட இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உடனே நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கொல்வோம் என்று அந்தக் கும்பல் கூறியதாகவும சகஸ்ரநாமம் கூறியுள்ளார்.
ஆஸதிரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’