வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 அக்டோபர், 2010

இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்த அரசாங்கம் திட்டம்: ஜே.வி.பி

லங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் இலவசக்கல்வியை ஒழித்து அதனைத் தனியார் மயப்படுத்தும் நோக்கத்திலேயே உயர்கல்வி அமைச்சர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிக்கும் கருத்துக்களைத் தெரிவித்து வருவதாக ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அவசரக்காலச் சட்டத்தின் கீழ்; கைதுசெய்யப்படவேண்டும்.
முன்னாள் இராணுவத் தளபதியான சரத்பொன்சேக்காவும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினார் என்றே கைது செய்யப்பட்டதாகவும், எனவே இன்று அதே குற்றத்தை புரியும் உயர்கல்வி அமைச்சரும் அவ்வாறு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’