அரசியலமைப்பின் படி இராணுவ நீதிமன்றம் ஒரு நீதிமன்றமா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றின் பொருள் கொள்ளல் வேண்டி மேன்முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ஆர்.எல்.ரஞ்சித் சில்வா, உபாலி அபயரத்ன ஆகியோர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் ,அரசியலமைப்பின உறுப்புரை 89(பி) இன் பொருள் கொள்ளல் வேண்டி உயர்நீதிமன்றின் கருத்தை வேண்டியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சட்டத்தின் படி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் நாடாளுமன்ற வாக்களிப்புக்களில் பங்குபற்றவும் தனது அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் பயன்படுத்துவதற்கும் தன்னை அனுமதிப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு தொடர்பாகவே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் 6ஆவது பிரதிவாதியான இராணுவ தளபதி தவிர சகல பிரதிவாதிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கும் படி பதிவாளருக்கு ஆணையிட்டது.
இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் குழாமிலிருந்த இரண்டு நீதிபதிகளுக்கிடையிலும் கருத்து வேறுபாடு நிலவியதால் மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவரிடம் முழு நீதிபதிகளடங்கிய குழாமை நாளை 29ஆம் திகதி அமர்விற்காக நியமிக்குமாறு இந்நீதிமன்றம் கோரியுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’