வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தொழிற்சாலைகள் காரணமாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், வவுனியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இன்று காலை வவுனியாவிற்கு விஜயம் செய்து சிவில் நிர்வாக அதிகாரிகளையும் பாதுகாப்பு படையினரையும் சந்தித்துடன் புதிய தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ள இடங்களையும் சென்று பார்வையிட்டனர்.
அத்துடன், மாவட்ட செயலகத்தில் வட மாகாண ஆளுநர், அரச அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்களுடனான சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து இதன்பொது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலை நிர்மாணப் பணிகள் முதலீட்டு சபையினூடாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், புதிய தொழிலகங்கள் செயற்படும்போது வவுனியா மாவட்டத்தைச் சேரந்த சுமார் நான்காயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு நிர்மாணிக்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை ஆடைத்தொழிற்சாலைகளாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’