வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 அக்டோபர், 2010

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைவள அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள கழிவகற்றல் நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு.

நா டுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விஞ்ஞானரீதியாக கழிவகற்றல் நடவடிக்கைகளை யாழ். குடாநாட்டிலும் ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றுகாலை அமைச்சரின் யாழ். பணிமனையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு சுற்றுச் சூழல் அதிகார சபையின் வெளிக்களப்பணிப்பாளர் எம்.கே.ஜே.லால் பெர்ணான்டோ சபையின் யாழ். பிராந்திய உதவிப் பணிப்பாளர் திருமதி விஜிதா யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துiராஜா இளங்கோ றீகன் யாழ். மாவட்டத்தின் சகல நகரசபைகள் மற்றும் பிரதேச கபைகளின் செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் ஆகியோர் பங்குகொண்டனர்.

இங்கு விளக்கவுரை வழங்கிய அதிகார சபையின் வெளிக்களப்பணிப்பாளர் எம்.கே.ஜே.லால் பெர்ணான்டோ விஞ்ஞான முறைமையிலான கழிவகற்றல் நடவடிக்கைகள் குறித்தும் அதனை செயற்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தார். இதன்பிரகாரம் இயற்கைவள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ்வரும் சுற்றுச்சூழல் அதிகார சபையினால் விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் குப்பைகளை அகற்றுவதற்கு உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி உதவிகளும் உபகரணங்களும் வழங்கப்படும் எனத்தெரிவித்தார். மேலும் இத்துப்போன குப்பைகளை உரமாகவும் பிளாஸ்டிக் பொருட்களை மாற்று உபயோகத்திற்காகவும் ஏனைய கழிவுகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது தொடர்பான பயிற்சி வழங்கப்படும்.

மேற்கூறிய சகல உதவிகளும் எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படும். இதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் பொருத்தமானதொரு காணியும் பயிற்சிக்காக ஆளணியினரையும் வழங்க வேண்டும். அத்துடன் யாழ். செயலகத்தில் இயங்கும் மத்திய சூழல் அதிகார சபையில் உரிய உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு பணிப்பாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த உள்ளுராட்சி அமைப்புக்களின் செயலாளர்கள் ஏற்கனவே தமக்கிடையே ஓர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கழிவகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் அனைத்து சபைகளும் தனித்தனியே மேற்படி திட்டத்தினை முன்னெடுப்பது விரயமான நடவடிக்கை என கருத்துத் தெரிவித்தனர். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகள் கொத்தணி அடிப்படையில் இணைந்து இந்நடவடிக்கையினை முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்த யோசனையினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனடிப்படையில் பிரதேச ரீதியாக ஒன்றிற்கு மேற்பட்ட சபைகள் இணைந்து கழிவகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதென்றும் அதனை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மேற்பார்வை செய்வதெனவும் இணக்கம் காணப்பட்டது.

மற்றொருபுறம் இயற்கைவள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ்வரும் சுற்றுச்சூழல் அதிகார சபையினால் விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் குப்பபைகளை அகற்றுவதற்கு உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி உதவிகளும் உபகரணங்களும் வழங்கப்படுவதற்கு மேலாக முறையாக வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் சபைகளுக்கு ரக்டர்களும் வழங்கப்படும் என்ற மேலதிக தகவலையும் சபையின் வெளிக்களப்பணிப்பாளர் எம்.கே.ஜே.லால் பெர்ணான்டோ தெரியப்படுத்தினார். அத்துடன் தமது அதிகாரசபையினூடாக யாழ். போதனா வைத்தியசாலை கழிவுகளை விஞ்ஞான ரீதியாக உயிரி வாயுவாக மாற்றி அதனை சமையலுக்கு பயன்படுத்தும் பூர்வாங்க திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்ற மேலதிக தகவலையும் அவர் தெரியப்படுத்தினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’