வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 அக்டோபர், 2010

பம்பலப்பிட்டி-கொள்ளுப்பிட்டி காலி வீதி நூறு மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு

கொழும்பு, பம்பலப்பிட்டி சந்தி முதல் கொள்ளுப்பிட்டி சந்தி வரையான காலி வீதியினை முழுமையான ஒரு வழிப்பாதையாக புனரமைக்கும் நடவடிக்கைக்கு நூறு மில்லியன் ரூபா செலவழிக்கப்படுவதாக கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமர் காமில் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இத்திட்டத்தை நான்கு மாதங்களுக்குள் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வீதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வீதி விளக்குக் கம்பங்களை அகற்றி வீதியின் இரு புறங்களுக்கும் மாற்றும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஒமர் காமில் கூறினார்.
அத்துடன் காலி வீதியில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையும் ஏற்கனவே போடப்பட்டிருந்த நீர் குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்களை அமைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மின்சார சபையும் வீதியின் இரு மருங்கிலும் மின் கம்பங்களை நடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒமர் காமில் தெரிவித்தார்.
புனர்நிர்மாணம் செய்து புதிதாக அமைக்கப்படும் வீதியில் ஒரே நேரத்தில் ஆறு வாகனங்கள் செல்ல முடியும் . அத்துடன் வாகனங்களை நிறுத்து வைக்கக்கூடிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமர் காமில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’