யாழ். மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர், தீர்ப்பு அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும்போது 2 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்ததால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
.வடமராட்சியைச் சேர்ந்த ராஜராஜன் ராஜ்குமார் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்தவர் ஆவார். 2003 ஆம் ஆண்டு தனது 3 மாத குழந்தையை காலைப்பிடித்து அடித்துக் கொன்றுவிட்டு மனைவின் கையை வெட்டித் துண்டாக்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு, யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று முடிவுற்றபோது மேற்படி நபருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி எஸ்.பரமராஜா தீர்ப்பளித்தார்.
அதன்பின் நீதிமன்றத்தைவிட்டு மேற்படி நபர் காவலர்களுடன் வெளியே வரும்போது திடீரென ஓடிச்சென்று இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்தார். இதனால் படுகாயமடைந்த மேற்படி நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’