ஸ்ரீரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் உருவச் சிலை இன்று நல்லூர் கலாசார மண்டபத்திலிருந்து நல்லூர் மணி மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நல்லூர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஆறுமுகநாவலரின் உருவச் சிலை அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கலாசார மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதனை மீண்டும் மணி மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டுமென மக்கள் பிரதிநிதிகள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு மீண்டும் சிலை பழைய இடத்திற்கு கொண்டு வருவதென தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் இன்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் பிரதான வீதியூடாக கலாசார மண்டபத்திலிருந்து மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. மங்கள வார்த்திய சகிதம் கொண்டு வரப்பட்ட உருவச்சிலையை மக்கள் பூரண கும்பம் வைத்து வழிபாடு செய்தனர்.
நல்லூர் கோயிலை அடைந்ததும் கோயில் வீதியைச் சுற்றிய பின்னர் மணி மண்டபத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட இடத்தில் ஆறுமுகநாவலரின் சிலை வைக்கப்பட்டு சிறப்புப் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நல்லை ஆதீன குருமுதல்வர் சமயப் பெரியார்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை புதிய மணி மண்டபத்திற்கான அடிக்கல்லும் இன்று நாட்டி வைக்கப்பட்டு;ளளது.
அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் உள்ளிட்டோர் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’