புத்தா என்ற பெயரிலில் இந்தோனேஷியாவில் இயங்கும் மதுபானசாலை பெளத்த மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாக உள்ளதனால் மூடி விடுமாறு இந்தோனேஷிய நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகமொன்றை மேற்கோள்காட்டி ரோயிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது
.பிரான்ஸை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் புத்தா என்ற பெயரிலான மதுபான சங்கிலி கடைத் தொடரை மூடி விடுமாறூ ஐரோப்பாவில் உள்ள இலங்கை தூதரகங்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தோனேஷியாவின் மத்திய ஜகார்த்தா மாவட்ட நீதிமன்றம் குறித்த மதுபானசாலையை உடனடியாக மூடுமாறு அதன் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது என ஜகார்த்தா குளோப் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மதுபானசாலை பெளத்த அலங்காரங்களையும் சிலைகளையும் பயன்படுத்தி பெளத்த மதத்தை அலங்கரிப்பதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இத்தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்யவுள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் தரப்பு சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’