நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் இன்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார் புகைப்படம் இணைப்பு
.கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் அவர்களிற்கும்; முக்கிய கலந்துரையாடல் ஒன்று திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் தற்போது நிரந்தர வீடுகள் அற்றிருப்பவர்களுக்கும் அத்தோடு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு வாழ்பவர்களுக்கும் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அத்தோடு கிழக்கு மாகாணத்தில் கணவனை இழந்து தங்களது வாழ்வாhரத்தினை ஈட்ட முடியாமல் வாழ்கின்ற பெண்களின் மேம்பாட்டிற்கு இந்திய சேவா அமைப்பு உதவிகளை புரிய முன்வர வேண்டும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் கேட்டுக்கொண்டார்.
மேற்படி முதலமைச்சரின் வேண்டுகோள்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் இந்திய உயர்ஸ்தானிகர் அசோககாந்த அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’