வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 1 செப்டம்பர், 2010

ஓட்டமாவடியில் இயங்கிய சட்டவிரோத கருக்கலைப்பு வைத்தியசாலை முற்றுகை

ட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில் செயற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு வைத்தியசாலையொன்றை முற்றுகையிட்ட வாகரை பொலிஸார் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய வைத்திய உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்
.வாகரை, கிரிமிச்சை பகுதியைச் சேர்ந்த 16 வயது யுவதியொருவரை அவரது உறவினர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதை அடுத்து அந்த யுவதி இரு மாத கர்ப்பிணியாகிய நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு சட்டவிரோத கருக்கலைப்புக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையிலேயே, அங்கு சென்ற பொலிஸார் குறித்த வைத்தியசாலையை முற்றுகையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சட்டவிரோத கருக்கலைப்பினைச் செய்த பெண் வைத்தியர் ஒருவரும் மேற்படி யுவதியின் சித்தியும் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுவதியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அவரது உறவினர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடிக் கைது செய்வதற்காக பொலிஸார் வலைவீசியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்னவின் பணிப்பில் மேலதிக விசாரணை நடத்தப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’