வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

வடமராட்சி கிழக்கு மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம்

டமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சகல அரச திணைக்களத் தலைவர்கள் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய அபிவிருத்தி மேம்பாட்டுக் கூட்டமொன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது புகைப்படம்  இணைப்பு  
.இன்றுமாலை மருதங்கேணி பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் மீளக்குடியேறும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் துறைசார் பிரச்சினைகள் தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக கடற்றொழில் விவசாயம் ஏனைய வாழ்வாதாரத் தொழில்கள் வீதி அபிவிருத்தி போக்குவரத்துச் சேவை வீடுகள் அமைத்தல் கிணறுகள் சுத்தம் செய்தல் கல்வி நடவடிக்கைகள் சுகாதாரம் கால்நடை வளர்ப்பு தபால்சேவை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நடவடிக்கைகள் சனசமூக நிலையங்கள் விளையாட்டுத்துறை அபிவிருத்தி உட்பட ஏனையதுறைசார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.
வடமராட்சி கிழக்கு பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதார தொழிலான கடற்றொழில் குறித்து ஆராயப்பட்ட சமயம் கருத்துத் தெரிவித்த பிரதேச படைகளின் கட்டளை அதிகாரியான கேணல் ஜெயத்திலக்க இப்பகுதியை தாம் புலிகளிடமிருந்து மீட்டெடுத்தபோது சுமார் அறுபது மீன்பிடிப்படகுகளைத் தாம் கண்டெடுத்து தமது பாதுகாப்பில் வைத்துள்ளதாகவும் அவற்றை உடனடியாகவே கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் இவ்வேளை கருத்து தெரிவித்த கடற்றொழில் பணிப்பாளர் தர்மலிங்கம் இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரம் கடற்றொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபா வீதம் அரசாங்கம் கொடுப்பனவாக வழங்கவுள்ளதை அறியத்தந்தார். மேலும் உதவிகள் தேவைப்படுமிடத்து அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு அவற்றை தாம்பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்தார். கடற்றொழிலுக்கு மேலாக மற்றைய பிரதான வாழ்வாதார தொழிலான விவசாயம் ஏனைய வாழ்வாதார தொழில்களான சிகை அலங்காரம் சலவைத்தொழில் போன்றவற்றை ஆரம்பிப்பதற்கும் தேவையான உதவிகளை பெற்றுத்தருவதாக அமைச்சரவர்கள் உறுதியளித்தார்.
மற்றொருபுறம் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டபோது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள உடனடி பணிப்புரைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாணவர்களுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு மேலதிக மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
பிரதேசத்தில் கட்டாக்காலிகளாகத் திரியும் மாடுகளைப் பிடித்து அவற்றை மீளக்குடியேறும் மக்கள் வளர்ப்பதற்கென கையளிப்பதுடன் இதற்கு படைத்தரப்பினரினது ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் மழைகாலத்திற்கு முன்னர் வீதி புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாரி மழைக்கு முன்பதாக பயன்தரு மரநடுகையினை மேற்கொள்ள பிரதேச மக்களுக்கு போதியளவு மரக்கன்றுகள் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு துறை தொடர்பான விடயங்களும் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அந்தந்த திணைக்கள அதிகாரிகளின் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு தனித்தனியாக ஆராயப்பட்ட நிலையில் அனைத்து அபிவிருத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு அமைச்சரவர்கள் உரிய உயரதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கியமை முக்கிய விடயமாகும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் ந.திருலிங்கநாதன் கமத்தொழில் சேவைகள் பிரதிப்பணிப்பாளர் பற்றிக் றஞ்சன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தர்மலிங்கம் மின்சார சபை பிரதிப் பொது முகாமையாளர் முத்துரட்ணானந்தம் கூட்டுறவு உதவி ஆணையாளர் அருந்தவநாதன் மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம் வடமராட்சி கல்விப் பணிப்பாளர் செல்வராஜா பிரதேச கட்டளை அதிகாரி கேணல் ஜெயதிலக பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ். மாவட்ட திட்டப்பணிப்பாளர் பிரதீபன் பருத்தித்துறை பிரதேச சபைச் செயலாளர் ச.சந்திரயோகன் வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சமாசத்தலைவர் சிவசாமி வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர் ராதாகிருஷ்ணன் வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் திருச்செல்வம் இலங்கை போக்குவரத்துச் சபை பிரதேச முகாமையாளர் எஸ்.யோகநாதன் வடமராட்சி ஈ.பி.டி.பி. அமைப்பாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் ஆகியோர் உட்பட ஏனைய அரசாங்க திணைக்கள மற்றும் சபைகளின் உயரதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெருந்தொகையானோர் இக்கூட்டத்தில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’