துபாயில், தனது காதலியின் கணவரை கத்தியால் குத்திக் கொன்ற 23 வயதான இலங்கையர் ஒருவர் மரண தண்டனையை எதிர்நோக்குகிறார்
.ரோவன் குமார் எனும் இந்த இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் துபாய் குற்றவியல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின் கடந்த ஜூன் மாதம் துபாய் மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வட்டாரமொன்றிடம் கேட்டபோது இவ்விடயம் குறித்து உத்தியோகபூர்வ தகல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பதிலளிக்கப்பட்டது.
இலங்கை வர்த்தகரும் ரோவன் குமாருடன் பணியாற்றியவருமான ஜே.பி. என்பவர் 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் குத்திக் கொல்லப்பட்டார். தனது கணவரை ஆபிரிக்கர் ஒருவர் கொன்றதாக அவரின் மனைவி பொலிஸாரிடம் முதலில் கூறினார். ஆனால் அப்பெண்ணுக்கும் குமாருக்கும் தொடர்பிருப்பதை சாட்சிகள் வெளிப்படுத்தினர்.
அதன்பின்னர் அதை ஒப்புக்கொண்ட மேற்படி பெண், குமாரே தனது கணவரை கொன்றதாகத் தெரிவித்தார்.
குமார் தான் கொலை செய்யவில்லை எனவும் ஆனால் ஜே.வியுடன் சண்டையிட்டதாகவும் கூறினார். குமார் குற்றவாளியாகக் காணப்பட்டபோதிலும் அவ்வேளையில் அது திட்டமிடப்பட்ட கொலை என உறுதிப்படுத்த முடியாததால் ஆயுள் தண்டனை மாத்திரம் வழங்கப்பட்டது.
எனினும், மேன் முறையீட்டு நீதிமன்ற விசாரணையின்போது, குறுகலான ஒழுங்கையொன்றில் குமார் கத்தியுடன் காத்திருந்து ஜே.பி. மனைவியுடன் கைகோர்த்தவாறு நடந்து வருவதைக் கண்டவுடன் அவரை குத்திக் கொன்றதை வழக்குத் தொடுநர்கள் நிரூபித்தனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய குமாரை அவரின் தாயாரின் வீட்டிலிருந்து பொலிஸார் கைது செய்யதமை குறிப்பிடத்தக்கது.
குமாருக்கு மத்திய சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
துபாயில் இறுதியாக 2002 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவரை கடத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் யேமனியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’