வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சீனாவில் கோட்டாபய

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உயர் மட்ட பாதுகாப்புக் குழுவொன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்குடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
.பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இக்குழுவில் சிரேஷ்ட படை அதிகாரிகள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
இராணுவத்தின் பிரதம படை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க இக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானப்படையின் பிரதம படை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பி.பீ. பிரேமச்சந்திரவும் சீனாவுக்குச் சென்றுள்ளதாக விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’