வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

தொழிற்சங்க பிரதிநிதிகள் தமது கோரிக்கைகளை உரிமையுடன் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

மது தேவைகள் பிரச்சினைகள் குறித்த கோரிக்கைகளுடன் வருகைதந்த யாழ். மாநகரசபை தொழிற்சங்க பிரதிநிதிகள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து விரிவாக கலந்துரையாடினார்கள். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளளன)
இன்று காலை அமைச்சரின் யாழ். பணிமனைக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் வருகைதந்தபோது யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ றீகன் யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.சரவணபவ ஆகியோரும் உடனிருந்தனர். தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் தனித்தனியாக விரிவாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவை தொடர்பாக முதல்வர் பிரதி முதல்வர் மற்றும் மாநகரசபை ஆணையாளர் ஆகியோருடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளை தெரியப்படுத்தினார். தொடர்ந்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சரவர்கள் தற்போது நடைபெறுவது ஜனநாயக ஆட்சி என்பதுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமே யாழ்.மாநகரசபையில் உள்ளது. எனவே தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னைய காலம் போலல்லாது மௌனம் கலைத்து எவ்வித தயக்கமும் இல்லாது தமது தேவைகள் பிரச்சினைகளை தெரியப்படுத்தி தமது கோரிக்கைகளை உரிமையுடன் கேட்டுப்பெற்றுக்கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்.
தொழிலாளர் நலன்கள் குறித்த தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள் அமுல்படுத்தப்படுவது குறித்து தான் பிறிதொரு நாளில் மீண்டும் ஒரு சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் இச்சந்திப்பின் நிறைவில் அமைச்சரவர்கள் உறுதியளித்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’