வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

கிளிநொச்சியில் 5 மில்லியன் ரூபா செலவில் குளங்கள் புனரமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 72 குளங்களில் முதலில் பூநகரி, பச்சிலைப்பள்ளி, கரச்சி, முழங்கா போன்ற பிரதேசங்களிலுள்ள 36 குளங்கள் 5 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்
.இந் நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பமாக உள்ளது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 36 குளங்களின் புனரமைப்புப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு, பத்தரமுல்ல ஆளுநர் உபகாரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் நீர்பாசனத் திணைக்களப் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்குளங்களைப் புனரமைக்கும் பணி 'சிறு குள நீர்ப்பாசனம்" என்னும் தலைப்பின் கீழ் இடம்பெறவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’