யாழ் மாவட்டத்திலுள்ள போதனா வைத்தியசாலை உட்பட ஏனைய அனைத்து வைத்தியசாலைகளினதும் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஏற்பாட்டில் இன்று கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இவ் உயர்மட்டக் கலந்துரையாடலின் போது யாழ் போதனா வைத்தியசாலைக்கென சிற்றூழியர்களை நியமித்தல் சுத்திகரிப்புச் சேவையின் குறைபாடுகள் சமையலறைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களைப் பெற்றுக் கொள்ளல் சமையலறையில் விறகு உபயோகத்தைத் தவிர்த்து எரிவாயு பயன்படுத்துதல் பராமரிப்புப் பகுதி ஒன்றை ஏற்படுத்துதல் வெளிநோயாளர் பகுதியை நோயாளர்களது வசதி கருதி விரிவாக்குதல் விடுதி எழுதுநர்களுக்கான நிரந்தர நியமனங்களைப் பெற்றுக் கொள்ளல் வைத்தியசாலையின் பழைய பொருட்களை அகற்றுதல் தாதிய உத்தியோகஸ்தர்களுக்கான பற்றாக்குறை விடுதி வசதி வைத்தியசாலையின் மேலதிகத் தேவைகளுக்காக காணி வசதியைப் பெற்றுக் கொள்ளல் அதிகாரிகளுக்கான வாகன வசதிகள் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தேவைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் ஏனைய வைத்தியசாலைகளில் நிலவும் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 75 சிற்றூழியர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கும் சுத்திகரிப்புச் சேவைக்கு புதிதாக ஒரு குத்தகைக்காரர் கேள்விப் பத்திரம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளதால் கொழும்பிலிருந்து ஒரு விசேட குழுவை அனுப்பி மேற்பார்வை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
சமையலறைப் பகுதிக்கான உபகரணங்களையும் பாத்திரங்களையும் உடன் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டதுடன் சமையலுக்கு எரிவாயுவை உபயோகப்படுத்தவும் இணக்கம் காணப்பட்டது.
பராமரிப்பு பகுதி தொடர்பில் மேலதிகமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பராமரிப்புச் செலவுக்கென 01 மில்லியன் ரூபாவை ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் விடுதி எழுதுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.
கொழும்பிலிருந்து விN~ட குழுவொன்றை அனுப்பி வைத்தியசாலைகளிலுள்ள பழைய பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதென்றும் தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர்களுக்கான விடுதி அமைப்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகள் தொடர்பிலும் வரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் இவற்றின் தேவைகளை படிப்படியாக நிவர்த்தி செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கும் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொண்டதன் பயனாகவும் அங்குள்ள பல்வேறு தரப்பினருடன் நடத்திய கலந்துரையாடல்களின் மூலமும் மேற்படி தேவைகள் மற்றும் குறைபாடுகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் இன்றைய தினம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய கலந்துரையாடலில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி வைத்திய கலாநிதி ரவிராஜ் தாதியர் சங்கப் பிரதிநிதிகள் தாதியர் பயிற்சிக் கல்லூரி அதிபர் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’