வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

தந்தையின் சித்திரவதையால் 8 வயதுச் சிறுமி கொலை

டுகண்ணாவ பொலிஸ் பிரிவில் உள்ள கோணாடிகா பெருந்தோட்டத்திலுள்ள எட்டு வயதுச் சிறுமி ஒருவர் தனது தந்தையினால் சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப் பட்டுள்ளதாகவும், சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகிறது
.கம்பளை நகரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள பின்தங்கிய பெருந்தோட்டமான கோணாடிக்கா தோட்த்தில் 8 வயது சிறுமியின் சடலத்தைப் பொது மக்கள் கண்டுள்ளனர். சடலத்தின் உடம்பில் பலத்த காயங்கள் காணப்படுவதன் காரணமாக அச் சிறுமியை அவளின் தந்தை தாக்கி இருக்கலாம் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சிறுமி மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி என்றும் அவளது தாய் வெளிநாட்டில் பணிப் பெண்ணாக இருப்பதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’