ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈரான் எல்லைகளில் உள்ள கடற் பரப்பில் வைத்து கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் கப்பல் கெப்டனான இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது
.ஓசன் ட்ரைட் என்ற கப்பலின் கெப்டன் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் அவர் பொரலஸ்கமுவையைச் சேர்ந்த டப்ளியு.எல் தர்மரத்ன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த நான்கு வருடங்களாக அக்கப்பலில் கெப்டனாகக் கடமை யாற்றுவதாகக் கூறப்படுகிறது.
கடற்கொள்ளளையர்கள் துப்பாக்கியால் சுட்டதாலே இம்மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் சாஜாவில் உள்ள வைத்திய சiலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’