மக்களின் இடங்களுக்கு சென்று நேரடியாக அவர்களிடம் கலந்துரையாடும் போது தான் அவர்கள் தொடர்பான உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள முடிகின்றது என பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (26) குமாரசாமிபுர பொது நோக்கு மண்டபத்தில் அப்பிரதேச மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் உங்களுடைய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாக என்னால் தீர்வு காணப்படக்கூடியவற்றிற்கு உடனடியாக தீர்வும் ஏனையவற்றிற்கு உரிய அதிகாரிகளுடன் பேசி தீர்வு பெற்றுத் தரப்படும். அந்த வகையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த 260 குடும்பங்களில் 201 குடும்பங்கள் மீள் குடியேற வந்துள்ளீர்கள் எனவே உங்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு பிரதேச செயலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்.
அத்தோடு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 60 குடும்பங்கள் கண்ணிவெடி அகற்றப்படாமை காரணமாக சொந்த இடங்களுக்கு மீளக் குடியமர முடியாதவர்கள் தற்காலிகமாக குமாரசாமிபுரத்திலுள்ள ஒர் காணியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அம் மக்கள் அங்கு தாங்கள் குடிநீர் மலசலகூடம் சுகாதாரம் தங்குமிடம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக சந்திரகுமார் அவர்களிடம் தெரிவித்தனர். உடனடியாக பிரதேச சபை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடிநீருக்கு ஏற்பாடு செய்ததோடு கழிவகற்றல் நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இதேவேளை குமாரசாமிபுர மக்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு பிரதேச சபை மற்றும் ஏனைய அதிகாரிகளையும் தன்னுடைய உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் அனுப்பி மக்களின் பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்க்கப்படுமென உறுதியளித்தார்.
மாதாந்தம் இடம்பெறுகின்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் கிராம மட்டங்களில் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என இவ்வாறு கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிடும் போது தான் தனக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்பதால் தான் நான் கிராமங்கள் தோறும் மக்களைச் சந்தித்து வருகின்றேன்.
மேலும் தற்காலிக நிரந்தர வீடுகள் வீதி குடிநீர் போக்குவரத்து விவசாயம் சுயதொழில் முயற்சிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இச் சந்திப்பில் குமாரசாமிபுர கிராம அலுவலர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’