யாழ் குடாநாட்டில் அரச மற்றும் தனியார் பேரூந்துச் சேவைகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாகவும் அதன்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டறிந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் பேரூந்து நிலையத்தில் அமையப் பெற்றுள்ள இலங்கை போக்குவரத்து சபைப் பணிமனைக்கு இன்று இரவு நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் அதன் பொதுமுகாமையாளர் கணேசபிள்ளை முகாமையாளர் லோகநாதன் மற்றும் மாவட்ட தனியார் பேரூந்துக் கழகத் தலைவர் கெங்காதரன் மேற்பார்வையாளர் மகாலிங்கம் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தினார்.
இதன்போது 1980களில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் எந்தெந்த மார்க்கங்கள் ஊடாகப் பயணித்தனவோ அந்தந்தப் பகுதிகளுக்கு மீண்டும் சேவைகள் நடத்தப்படுவதற்கு தடையாகவுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக கேட்டறிந்து கொண்டார்.
முக்கியத் தடையாகவுள்ள பாதைகள் குறைபாடுகள் ஆளணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு அவை குறித்தான அறிக்கைகளை தம்மிடம் தந்துதவுமாறும் அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இவ்வாறு அரச மற்றும் தனியார் பேரூந்துச் சேவைகள் விஸ்தரிக்கப்படும் போது குடாநாட்டு மக்கள் முழுமையாக போக்குவரத்துச் சேவைகளை பெற்றுக் கொள்ள இலகுவாக இருக்குமென்றும் குறிப்பாக தற்போது மீள்குடியேற்றம் இடம்பெறும் இடங்களுக்கு பேரூந்துச் சேவைகளின் அவசியம் குறித்தும் அமைச்சர் தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் அவர்களுடன் யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் கணேஸ் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோரும் உடனிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’