பல்வேறு சந்தர்ப்பங்களில் மனநிலை பாதிக்கப்படும் நோயாளிகள் பயன்படுத்தும் 'லினியும்' மருந்து மருந்தகங்களில் கையிலிருப்பில் இல்லையெனத் தெரிவிக்கப்படுகிறது
.இவ்வாறான நோயாளர்களுக்கு மேற்படி மருந்து வைத்தியசாலைகளில் வழங்கப்படுவதுடன், அவர்கள் வைத்தியசாலையிலிருந்து துண்டு வெட்டிச் செல்லும்போது இந்த மருந்தை பாவிக்கும்படி ஆலோசனை கூறப்பட்டு வந்ததாக உள சுகாதார தேசிய நிறுவனத்தின் வைத்திய நிபுணர் ஜயன் மென்டிஸ் தெரிவித்தார்.
'லினியும்' மருந்து அங்கொடை வைத்தியசாலை உட்பட அரசாங்க வைத்தியசாலைகளில் மாத்திரமே நோயாளர்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்த வைத்திய நிபுணர், ஒசுசல மருந்தகத்திலும் கூட மேற்படி மாத்திரையை வாங்க முடியாது எனவும் கூறினார்.
வைத்தியர்கள் கூறியபடி இந்த மருந்தை பாவிக்காவிட்டால், இந்த நோய் மேலும் அதிகரிக்கும் என்றும் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் கூறினார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’