வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 செப்டம்பர், 2010

விளம்பரத் தூண் மீதேறி போராடிய நபருக்கு விளக்கமறியல்

நேற்றைய கதா நாயகன் இன்றைய கைதி 
கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் விளம்பரத் தூண் ஒன்றின் மீதேறி போராட்டம் நடத்திய நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் விளம்பரத் தூண் ஒன்றின் மீதேறி போராட்டம் நடத்தியதுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் வரை போராடப்போவதாகக் கூறிய அந்நபர் 18 மணிநேரத்தின் பின்னர் நேற்றிரவு தரையிறக்கப்பட்டார். நீர்,ஆகாராம் எதுவுமின்மையால் உடல்நிலை பாதிப்புற்ற அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
காலியைச் சேர்ந்த மகேஷ் சொய்சா (வயது 31) என்பவரே திடீரென இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டவராவார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’