போரில் அழிந்திருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை துரிதமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்திப் பணியில் அரசாங்கத்துடன் இணைந்து மக்கள் அமைப்புகளும் அரச ஊழியர்களும் பங்காற்றவேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கேட்டுக் கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கிளிநொச்சியில் வேலைவாய்ப்புக்களை வழங்கவேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள ஆடைத்தொழிற்சாலைக்;கான அடிக்கல் நாட்டும் வைபவம் அறிவியல் நகர்ப்பகுதியில் நடைபெற்றது. அடிக்கல்லினை இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நாட்டினார்.
தொடர்ந்து உற்பத்திப் பயிற்சிநிலையம் கிளிநொச்சி நகரப்பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கிளிநொச்சி மக்கள் சொந்த மாவட்டத்திலேயே வேலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்தவகையிலேயே இந்த ஆடை உற்பத்தி மையத்தின் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலேயே இந்த பயிற்சி நிலையமும் ஆரம்பிக்கப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே விவசாயம் கடற்றொழில் என்பவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுயதொழில் முயற்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இதைவிட ஏனையவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் கிளிநொச்சி மாவட்டம் துரித அபிவிருத்தியைப் பெற்றுவிடும். இந்த அபிவிருத்தியை எட்டுவதற்கு எங்களுடன் இணைந்து அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என சந்திரகுமார் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இளைஞர் சேவை பிரதி அமைச்சர் மகிந்தானந்த அளுக்கமே பாராளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’