சாவகச்சேரி தச்சன்தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் காணப்பட்டது. இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தைப் பொலிஸார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
அதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார்.
மீட்கப்பட்ட சடலம் குறித்து தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’