வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 செப்டம்பர், 2010

வடமராட்சி கிழக்கு வீதிகளைப் புனரமைக்க அமைச்சர் நடவடிக்கை!

வடமராட்சி கிழக்குப் பதியில் மக்கள் மீள்குடியமர்ந்துவரும் நிலையில் அங்குள்ள வீதிகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் அமைச்சர் அவர்களின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வடக்கு கோரண்பற்று தாளையடி உள்ளிட்ட பகுதிக்கான வீடுகள் கடந்தகால யுத்த சூழ்நிலையில் மிகவும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இதேவேளை கோரன்பற்றிலிருந்து தாழையடிக்குச் செல்லும் வீதியிலுள்ள பாலமும் இடிந்து கடும் சேதமடைந்துள்ளது.
இவற்றை திருத்தம் செய்வது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையைச் சேர்ந்த பொறியியலாளர் ராதாகிருஷ்ணன் வீதிஅபிவிருத்தி திணைக்களத்தைச் சேர்ந்த பிரதம பொறியியலாளர் சிவனேசன் மருதங்கேணி பிரதேச செயலாளர் திருலிங்கநாதன் ஈ.பி.டி.பி வடமராட்சி அமைப்பாளர் சிறீரங்கேஸ்வரன் உள்ளிட்ட வடமராட்சி கிழக்கு மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதேவேளை இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மதுமதி அங்கு கருத்துத் தெரிவிக்கும் போது,
சுனாமிக்குப் பின்னரான காலப்பகுதியில் இந்த வீதி திருத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசு 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ததாகவும் அந்த நிதி மூலம் வீதிகளையும் பாலத்தையும் புனரமைக்க முடியாது எனவும் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே இந்த நிதியுடன் மேலும் நிதியைப் பெற்றுக்கொண்டு திருத்த வேலைகைள செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதி வழங்கினார்.
அத்துடன் வீதிகளை பிரதேச சபை ஊடாகவும் பாலத்தை வீதி அபிவிருத்திச் சபை ஊடாகவும் மேற்கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’