வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

மக்களின் குறைபாடுகளை விரைவாக நீக்குவோம் - வன்னேரிக்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

க்களின் குறைபாடுகள் விரைவாக நீக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை வழமைக்குத் திருப்பப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் இன்று (18)இடம்பெற்ற சிறுபோக நெல் அறுவடை விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் இங்குள்ள விளைநிலங்கள் பல பயிரிடப்படாமல் இருக்கின்றன. அவை என்ன காரணத்திற்காக பயிரிடப்படாமல் இருக்கிறது என்பது தொடர்பாக உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி அவை பயிரிடப்படுவதற்காக மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்தோடு காணி இல்லாத பிரச்சினை மிக முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. காணி இல்லையென்றால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கப்பெறுகின்ற உதவிகள் எவையும் கிடைக்கப்பெறாமல் போய்விடும். எனவே காணி அற்றவர்களுக்கு விரைவில் இங்குள்ள அரச காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் காணி இருந்தும் காணி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு விரைவாக அவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
அடுத்து வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை இம்மாவட்டம் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இங்கு பல உற்பத்தி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் சில ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அவை கிளிநொச்சியின் புறநகர் பகுதியிலேயே ஆரம்பிக்கப்படும். இவ் ஆடைத் தொழிற்சாலைகளில் பெண்களுக்கே அதிக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும். ஆடைத் தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டால் சுமார் 1500 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும்.
மேலும் முன்னர் இயங்கிய ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது இயங்கும் பட்சத்தில் அங்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.
விவசாயிகளை பொறுத்தவரையில் நெல் விதைப்பு முதல் அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல் என எல்லா ஏற்பாடுகளையும் நாம் ஏற்படுத்தித் தருவோம். விதைநெல் கிருமிநாசினி உரம் நிலம் உழுதல் போன்ற பல வசதிகளையும் இலவசமாக வழங்குகின்றோம். அத்தோடு நெல்லினை நீங்கள் சந்தைப்படுத்துவதற்கு வசதியாக கூட்டுறவுச் சங்கங்கள் உட்பட பல மொத்தக் கொள்வனவாளர்களுடன் தொடர்புகொண்டு அதற்கான ஒழுங்குபடுத்தல்களையும் செய்து தருவோம் என்றும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ் அறுவடை நிகழ்வில் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் வன்னேரிக்குளம் கிராமசேவையாளர் சபாரட்ணம் மற்றும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’