தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் தொழிற்பயிற்சி போதனாசிரியர்களாக பணிபுரிவோர் தமக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத்தருமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்றி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
.இன்று அமைச்சரின் யாழ். பணிமனைக்கு வருகைதந்த மேற்படி போதனாசிரியர்கள் பதினான்கு பேர் தமது கோரிக்கைகளைத் தெரியப்படுத்தினார்கள். தெல்லிப்பளை கோப்பாய் சாவகச்சேரி சண்டிலிப்பாய் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் தொழிற்பயிற்சி போதனாசிரியர்களாக பணிபுரியும் தமக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்த அவர்கள் தமது குடும்ப நிலவரம் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமை என்பவற்றை கருத்திற்கொண்டு இந்நியமனத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கை குறித்து கவனமெடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’