வவுணதீவு அபிவிருத்தியை அரசாங்கம் புறக்கணிப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் அவர்கள் கிழக்கு மாகணசபை ஆளுநருக்கு சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்
.மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் யுத்தகாலத்தில் அதிகஷ்டப் பிரதேசமாக இருந்தது வந்தது. தற்போது பல திட்டங்கள் இடப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
1. மேய்ச்சல் தரைக்கும் மேட்டுநிலப் பயிர்ச் செய்கைக்கும் காணி போதாது என பிரச்சினை எழும்போது, வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்கு காணி வழங்க சில அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பது எந்த மக்களின் நலன் கருதி.
2. உன்னிச்சைக் குளத்தில் இருந்துவரும் குடிநீரை இந்தப்பகுதியில் உப்புநீர் உள்ளபகுதிக்கும் மேட்டுநிலம், உள்ள பகுதிக்கும் வழங்க திட்டம் இடப்படவில்லை. மக்களின் முறைப்பாட்டிற்கு பிறகு தான் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்னும் வேலை ஆரம்பிக்கப்படவில்லை.
3. பாவக்கொடிச்சேனை பகுதி அபிவிருத்திக்கென முதலமைச்சரால் 7 கோடிக்கு மேற்பட்ட நிதி ஒதுக்குவதாகக் கூறி, இதற்கான சகல வேலைகளும் முடிந்த நிலையில் நிதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் விரக்தி நிலையில் இருக்கும் போது மீண்டும் மீண்டும், இப்பகுதி அபிவிருத்தி வேலைகளில் தடங்கல் ஏற்படுத்தப்படுகின்றன. இது ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் வேலையென மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இது ஆரோக்கியமான விடயமல்ல. இப்படியிருக்கும் நிலையில் போது மீண்டும் வீதி அபிவிருத்தியிலும் தடங்கலை ஏற்படுத்தியுள்ளார்கள்.
எவ்வாறிருந்தாலும் இதற்கான முழுப்பொறுப்பையும் இதில் பங்கு கொண்ட மத்திய உள்ளூராட்சி அமைச்சு, கிழக்கு மாகாணாசபையின் ஆளுநர், ஒரு சில உயரதிகாரிகள், மத்திய அமைச்சர் ஒருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நல்லது நடக்க வேண்டுமாயின் இது தொடர்பாக உரிய நடவடிக்கைககளை எடுக்குமாறு இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’