வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இரா.துரைரெத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரா.துரைரெத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஜூலை, 2012

கிழக்கு மாகாண மக்கள் அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள சுயநலவாதிகளுக்கு வாக்களிக்கக்கூடாது


மௌ னமாக இருந்த சர்வதேசமும் எமது நலன் விரும்பிகளும், ஏன் இலங்கை அரசையும் கூட கடைசித் தேர்தலில் தமிழ்தேசியத்திற்கு நீங்கள் அளித்த வாக்குகளின் மூலம் கண்திறக்க வைத்துள்ளீர்கள். இந்த நிலையில் தான் கிழக்கு மாகாணசபை முறைகேடாகக் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியத்தை நிலைநாட்ட கிழக்குத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

வவுணதீவு அபிவிருத்தியை அரசாங்கம் புறக்கணிக்கின்றது: இரா.துரைரெத்தினம்

வுணதீவு அபிவிருத்தியை அரசாங்கம் புறக்கணிப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் அவர்கள் கிழக்கு மாகணசபை ஆளுநருக்கு சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்

திங்கள், 7 டிசம்பர், 2009

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் வாக்குகள் மோசடி செய்யப்படலாம் -இரா.துரைரெத்தினம்!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் வாக்குகள் மோசடி செய்யப்படலாம் அல்லது விரும்பாத ஒருவர் தெரிவாகுவதற்கு உதவியாக அது அமைந்து விடலாமென ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அமைப்பின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைத்தினம் தெரிவித்துள்ளார். அப்படி வாக்களிப்பதென்றால் தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு உடன்பாடு உள்ளவரை ஆதரிக்கலாம். 1. வடக்கு கிழக்கு இணைய வேண்டுமா? அல்லது பிரிய வேண்டுமா? என்பது தொடர்பாக அரசு தீர்மானிக்க முடியாத பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை தீர்மானித்தல் வேண்டும். 2. தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தொடரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்தோடு அரசகாணி தொடர்பான நிலையான கொள்கை வகுக்கப்பட வேண்டும் .3. அரசியல் யாப்பின் 13வது திருத்தச்சட்டம் காலத்திற்கு ஏற்றவகையில் திருத்தப்பட்டு கிழக்கு மாகாணசபை பூரணத்துவமான சபையாக இயங்கும் வகையில் அதிகாரங்களை உடனடியாக வழங்க ஆவனசெய்ய வேண்டும் . 4.1982ம் ஆண்டிற்கு பின்னர் இடம்பெயர்ந்த சகலமக்களும் சொந்த கிராமங்களில் மீளக்குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 5. வட கிழக்கில் நிர்வாகத்துறையில் இராணுவ மயமாக்கல் மற்றும் பாதுகாப்பு வலயம் போன்ற செயற்பாடுகள் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.